மகாகவி காளிதாசர்
மகாகவி காளிதாசர் ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..! சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்! காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக இருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்! .... அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளுங்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன் ! ஒருவர் சூரியன் ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்! .... சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்த பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று செல்வம் , இரண்டு இளமை ! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்! சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! .... உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்! ஒன்று பூமி ! எவ்வளவு மிதித்தாலும், எவ...