அக்ஷய திருதி
அக்ஷய திருதி ஸ்பெஷல் !
அட்சயம் என்றால் வளருதல் எனப்படுவதால் அள்ள அள்ள வளர்ந்து கொண்டது அட்சய பாத்திரம்.
அதுபோல் அட்சய திருதியை என்பது செல்வத்தினை மேன்மேலும் வழங்கக்கூடிய நாள்.
அட்சய திருதியையன்று நாம் பூஜிக்க வேண்டிய முக்கிய கடவுள்கள் மஹா விஷ்ணு, மஹா லக்ஷ்மி, பரமசிவன், பார்வதி, அன்னப்பஞ்சம் போக்கும் அன்னபூரணி, கல்விச் செல்வம் தரும் கலைமகள், குறையற்ற நிதியம் தரும் குபேரன் போன்றவர்கள்.
அட்சய திருதியையன்று பொன்னும் பொருளும் வாங்கி, பூசைகள் செய்து இறைவனை வணங்கினால் நன்மை உண்டாகும் ...
ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், வெள்ளி, சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இடவேண்டும்.
அதன்மீது மஞ்சள் பூசிய தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும்.
இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும்.
பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம்.
இவ்வாறு பூசை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும்
அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது.
அட்சய திருதியை தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாகும்.
Comments
Post a Comment