அச்யுதாஷ்டகம்...-2
(அச்யுதாஷ்டகம்...)
(ஸ்லோகம் −2)
அச்யுதம் கேஸவம் ஸத்யபாமாதவம்
மாதவம் ஶ்ரீதரம் ராதிகாராதிதம்
இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம்
தேவகிநந்தனம் நந்தஜம் ஸந்ததே.
ஒருநிலையில் நின்றுநம்மை
உயர்த்துகின்ற உத்தமன்; (அச்யுதன்)
சுருள் கேசக்குழலாலே
சொக்கவைக்கும் சுந்தரன்! (கேஸவன்)
தருவானே இன்பமெல்லாம்
சத்யபாமை காதலன்; (ஸத்யபாமாதவன்)
அருள்கொடுக்கும் அலர்மகளின்
அகம்நிறைந்த ஆண்டவன்! (மாதவன்)
திருமகளை த்ருப்தியோடு
மார்வமேற்ற தூயவன்; (ஶ்ரீதரன்)
ஒருஉயிராய் ராதையோடு
உட்கலந்த கிருட்டினன்! (ராதிகாராதிதன்)
பொருளாகப் பூமகளின்
நெஞ்சஏடு நுழைந்தவன்; (இந்திராமந்திரன்)
உருவத்தால் உளம்பறித்து
உயிர்கொள்ளும் மன்மதன்!
(சேதஸா ஸுந்தரன்)
திருவயிற்றில் குடியிருக்க
தேவகிக்கு இசைந்தவன்; (தேவகிநந்தன்)
இருள்கெடுக்கும் நந்தமகவை
இதயம் விம்மத் துதிக்கிறேன்!
Comments
Post a Comment