அச்யுதாஷ்டகம்...-1

 (மீள் பதிவு..)


(அச்யுதாஷ்டகம்...)


(ஸ்லோகம் −1)


அச்யுதம் கேஸவம் ராமநாராயணம்

க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்

ஶ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்

ஜானகிநாயகம் ராமசந்த்ரம் பஜே  (1)


அபயம்வேண்டும் யாவரையும்

அருளினாலே தாங்குவன்; (அச்யுதன்)

அரனுக்கும் அயனுக்கும்

அந்தர்யாமி ஆனவன்! (கேஸவன்)


அகமெல்லாம் குளிரவைக்கும்

அழகுதோற்றம் உடையவன்; (ராமன்)

அடியவர்கள் விரும்புகின்ற

உருவமதில் நிறைபவன்!(நாராயணன்)


அடர்இருளின் நிறத்தினனாய்

அகமதையே கவர்பவன்! (க்ருஷ்ணன்)

அன்னையிட்ட, கயிற்றுக்கு

அகப்பட்டு நின்றவன்! (தாமோதரன்)


அனைத்தினிலும் உறைபவனாம் 

வசுதேவர் புத்திரன்! (வாஸுதேவன்)

ஆவியையும் அபகரித்து

ஆட்கொள்ளும் மித்திரன்! (ஹரி)


அலர்மகளை அன்போடு

மார்வமதில் ஏந்துவன்; (ஶ்ரீதரன்)

அவளுக்கு ஏற்றவனாய்

ஆசைக் கேள்வன் ஆனவன்! (மாதவன்)


ஆடிப்பாடும் கோபியர்க்கு

அந்தரங்க மோகனன்! (கோபிகா வல்லபன்)

அன்னைசீதை நாயகனாம்

அண்ணலைநான் துதிக்கிறேன்! (1)

Comments

Popular posts from this blog

12TH STANDARD CHEMISTRY PROJECT- DYEING

12TH STANDARD CHEMISTRY PROJECT (CBSE) - DENATURATION OF MILK AND EGG PROTEIN

ஸ்ரீசனீஸ்வர பகவான் நோய்களை யாருக்கு எப்போது தருவார் ?