அச்யுதாஷ்டகம்..-3
அச்யுதாஷ்டகம்..)
(ஸ்லோகம் −3..)
விஷ்ணவே ஜிஷ்ணவே ஸங்கினே சக்ரிணே
ருக்மிணிராகிணே ஜானகீஜானயே
(b)பல்லவீவல்லபாயார்ச்சிதாயாத்மனே
கம்ஸவித்வம்ஸினே வம்ஸினே தே நம:
அணுவினிலும் ஊடுருவி
அண்டமெலாம் நிறைந்தவன்; (விஷ்ணு)
அன்றும் இன்றும் என்றுமே
வெற்றியுடை மன்னவன்; (ஜிஷ்ணு)
அழகுஸங்கம் கையிலேந்தி
அகம்நுழையும் வித்தகன்; (ஸங்கின:)
ஆழிக்கரத்தால் அபயமளிக்கும்
அடியவரின் அஞ்சனன்; (சக்ரிண:)
ஆசைநெஞ்சம் ருக்மிணிக்கு
அடைக்கலமாய்த் தந்தவன்; (ருக்மிணி ராகின:)
அழகுபொலியும் ஜானகியியைத்
தன்மனையாய்க் கொண்டவன்; (ஜானகி ஜானய:)
ஆயர்குல கோபியரின்
நெஞ்சில்நிற்கும் நித்திலன்; (பல்லவி.....ஆத்மனே..)
அசுரன்கம்ஸன் கதைமுடித்த ..
அஸஹாய சாஹஸன்; (கம்ஸவித்வம்ஸின:)
அதரம்தந்து வேங்குழலை
ஆவியுருக இசைப்பவன்; (வம்ஸின:)
அவனிருதாள் அபயமென்று
அடியேனும் பணிகிறேன்!
Comments
Post a Comment