Posts

Showing posts from June, 2021

அச்யுதாஷ்டகம்..-3

 அச்யுதாஷ்டகம்..) (ஸ்லோகம் −3..) விஷ்ணவே ஜிஷ்ணவே ஸங்கினே சக்ரிணே ருக்மிணிராகிணே ஜானகீஜானயே (b)பல்லவீவல்லபாயார்ச்சிதாயாத்மனே கம்ஸவித்வம்ஸினே வம்ஸினே தே நம: அணுவினிலும் ஊடுருவி அண்டமெலாம் நிறைந்தவன்; (விஷ்ணு) அன்றும் இன்றும் என்றுமே வெற்றியுடை மன்னவன்; (ஜிஷ்ணு) அழகுஸங்கம் கையிலேந்தி அகம்நுழையும் வித்தகன்; (ஸங்கின:) ஆழிக்கரத்தால் அபயமளிக்கும் அடியவரின் அஞ்சனன்; (சக்ரிண:) ஆசைநெஞ்சம் ருக்மிணிக்கு அடைக்கலமாய்த் தந்தவன்; (ருக்மிணி ராகின:) அழகுபொலியும் ஜானகியியைத் தன்மனையாய்க் கொண்டவன்; (ஜானகி ஜானய:) ஆயர்குல கோபியரின்                   நெஞ்சில்நிற்கும் நித்திலன்; (பல்லவி.....ஆத்மனே..) அசுரன்கம்ஸன் கதைமுடித்த           .. அஸஹாய சாஹஸன்; (கம்ஸவித்வம்ஸின:) அதரம்தந்து வேங்குழலை ஆவியுருக இசைப்பவன்; (வம்ஸின:) அவனிருதாள் அபயமென்று அடியேனும் பணிகிறேன்!

அச்யுதாஷ்டகம்...-2

 (அச்யுதாஷ்டகம்...) (ஸ்லோகம் −2) அச்யுதம் கேஸவம் ஸத்யபாமாதவம் மாதவம் ஶ்ரீதரம் ராதிகாராதிதம் இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம் தேவகிநந்தனம் நந்தஜம் ஸந்ததே.  ஒருநிலையில் நின்றுநம்மை உயர்த்துகின்ற உத்தமன்; (அச்யுதன்) சுருள் கேசக்குழலாலே சொக்கவைக்கும் சுந்தரன்! (கேஸவன்) தருவானே இன்பமெல்லாம் சத்யபாமை காதலன்;  (ஸத்யபாமாதவன்) அருள்கொடுக்கும் அலர்மகளின்  அகம்நிறைந்த ஆண்டவன்! (மாதவன்) திருமகளை த்ருப்தியோடு மார்வமேற்ற தூயவன்; (ஶ்ரீதரன்) ஒருஉயிராய் ராதையோடு உட்கலந்த கிருட்டினன்! (ராதிகாராதிதன்) பொருளாகப் பூமகளின் நெஞ்சஏடு நுழைந்தவன்; (இந்திராமந்திரன்) உருவத்தால் உளம்பறித்து உயிர்கொள்ளும் மன்மதன்!  (சேதஸா ஸுந்தரன்)                                                                திருவயிற்றில் குடியிருக்க         தேவகிக்கு இசைந்தவன்; (தேவகிநந்தன்) இருள்கெடுக்கும் நந்தமகவை இதயம் விம்மத் துதிக்கிறேன்...

அச்யுதாஷ்டகம்...-1

 (மீள் பதிவு..) (அச்யுதாஷ்டகம்...) (ஸ்லோகம் −1) அச்யுதம் கேஸவம் ராமநாராயணம் க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம் ஶ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம் ஜானகிநாயகம் ராமசந்த்ரம் பஜே  (1) அபயம்வேண்டும் யாவரையும் அருளினாலே தாங்குவன்; (அச்யுதன்) அரனுக்கும் அயனுக்கும் அந்தர்யாமி ஆனவன்! (கேஸவன்) அகமெல்லாம் குளிரவைக்கும் அழகுதோற்றம் உடையவன்; (ராமன்) அடியவர்கள் விரும்புகின்ற உருவமதில் நிறைபவன்!(நாராயணன்) அடர்இருளின் நிறத்தினனாய் அகமதையே கவர்பவன்! (க்ருஷ்ணன்) அன்னையிட்ட, கயிற்றுக்கு அகப்பட்டு நின்றவன்! (தாமோதரன்) அனைத்தினிலும் உறைபவனாம்  வசுதேவர் புத்திரன்! (வாஸுதேவன்) ஆவியையும் அபகரித்து ஆட்கொள்ளும் மித்திரன்! (ஹரி) அலர்மகளை அன்போடு மார்வமதில் ஏந்துவன்; (ஶ்ரீதரன்) அவளுக்கு ஏற்றவனாய் ஆசைக் கேள்வன் ஆனவன்! (மாதவன்) ஆடிப்பாடும் கோபியர்க்கு அந்தரங்க மோகனன்! (கோபிகா வல்லபன்) அன்னைசீதை நாயகனாம் அண்ணலைநான் துதிக்கிறேன்! (1)

Mars in astrology

 ஜோதிடத்தில் நவகிரக செவ்வாய் பற்றிய விரிவான பதிவு ! செவ்வாய்  செவ்வாய் இது தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும். சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வருகிறது.  செவ்வாய் சகோதரன் காரகன் ஆகிறார். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது வெறித்தனமாகவும். விருச்சகத்தில் உள்ள போது வேகம் குறைவாகவும் இருக்கிறார்.  திருடு,வெட்டுக்காயம்,தீ காயம்,எதிரிகள்,பேராசை, அதிக காமம், போலீஸ், துணிச்சல், அரசியல் தொடர்பு ஆகிய குணங்கள் ஆகும்.  செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன.  1,4,7 இருப்பது நல்லதல்ல.  2,4,7,8,12 ஆம் இடங்கள் இருப்பது நல்லதல்ல.  இந்த இடங்களில் இருந்தால் தோஷம் ஆகும்.  அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து  எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள்,  நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம்  இருந்தே தீரும் என்பது உறுதி.  பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல்,  வைராக்கியம், பகைவரை ...

சிவனின் திருவிளையாடல்

 சிவனின் திருவிளையாடல் திருவிளையாடல் 31 உலவாக்கிழி அருளிய படலம் மன்னன் குலபூஷண பாண்டியன் பெரிய வள்ளல். சிவ புண்ணியங்களை தவறாது செய்து வந்ததால் பேரும் புகழும் பெற்றான். இதனால் அவனுக்கு அகந்தை ஏற்பட்டது. அகந்தை கொண்ட மன்னன் குலபூஷணனுக்கு மருந்து தர முடிவு செய்தார் சுந்தரேஸ்வரர். மன்னன் தவறு செய்தால் மக்களுக்கு பாவம். மக்கள் தவறு செய்தால் மன்னனுக்கு பாவம் ஏற்படும் என்பது நியதி. இப்போது, மன்னன் செய்த பாவத்தால் மதுரை மக்களுக்கு சோதனை ஏற்பட்டது. மழை இல்லாமல் பயிர்கள் வாடின. வேதம் கற்ற அந்தணர்கள் யாகங்களைச் சிறப்பாகச் செய்து, வருணனுக்கு அவிர்பாகம் போய் சேர்ந்தால் தான், அவன் மகிழ்ச்சியுடன் மழையைக் கொடுப்பான். அவ்வாறு மறுத்தால் ஒன்று பெருமழை கொட்டி பயிர்களை அழித்து விடுவான், ஆறுகளையும் குளங்களையும் கரை மீறி போகச் செய்து சேதப்படுத்தி விடுவான். அல்லது பெய்யாமலேயே கெடுத்து விடுவான். இப்போது, மதுரையில் மழை இல்லாமல் போய்விட்டது. வைகையில் சொட்டுத்தண்ணீர் இல்லை. குளங்களும் வற்றியதால் குடிநீருக்கே தட்டுப்பாடாகி விட்டது. இது நீண்டகாலம் நீடித்ததால், பசி, பட்டினி என மக்கள் வருந்தினர். மன்னனுக்கு தனக்க...

மகாபாரதம்

 மகாபாரதம்  பகுதி-9  அம்பா இப்படி சொன்னதும் பீஷ்மர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.மகளே! காதலை அழிக்கவல்லவர் யார்? காதலைக் கெடுப்பவர்கள் நன்றாக வாழ முடியாது. நீ விரும்பியபடி சாளுவதேசம் செல். உன் காதலனை மணந்து கொண்டு சந்தோஷமாக இரு, என வாழ்த்தி, தக்க படைபலத்துடன் அவளை சாளுவ தேசத்துக்கு அனுப்பி வைத்தார்.அம்பா மிகுந்த மகிழ்ச்சியுடன் சாளுவதேசத்துக்கு சென்றாள். அரண்மனைக்குச் சென்று பிரம்மதத்தனை அப்படியே அள்ளி அணைத்தாள்.மன்னவரே! பீஷ்மரிடம் பிடிபட்டவர்கள் தப்பித்த வரலாறு உண்டா? நான் உங்கள் மீது கொண்ட காதலை அவரிடம் தெரிவித்தேன். அவரது தம்பியை மணந்து நிம்மதியாக வாழ முடியாது. மனதில் ஒருவனையும், வீட்டில் ஒருவனையும் சுமந்து கொண்டு வாழ முடியாது என்றேன். என் கருத்தை பீஷ்மர் ஏற்றார். என்னை விடுவித்து விட்டார். பிரம்மதத்தரே! இனி நம்மை பிரிக்க யாருமில்லை. நம் மணநாளைக் குறியுங்கள், என படபடவென பொரிந்தாள். சீ மானம் கெட்டவளே! வெளியே போ, என அரண்மனையே அதிரும் வகையில் கத்தினான் பிரம்மதத்தன். அம்பா அதிர்ந்தாள். ஏ அம்பா! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய். அந்த பீஷ்மன் தன் தம்பி விசித்திர வீரியனுக்காக உன்னை அழ...

லிங்கபுராணம்

 லிங்கபுராணம்  பகுதி 8  தாருகாவனத்தில் திகம்பர சந்நியாசி தாருகாவனத்தில் இருந்து முனிவர்களுக்கு உண்மையை உணர்த்த எண்ணி சிவபெருமான் புறப்பட்டார். திகம்பரராய், சிறந்த அழகனாய், கையில் ஓடு ஏந்தி பிக்ஷõடனாராய் புறப்பட்டார் ஈசன். அவரைக் கண்ட ரிஷிபத்தினிகள் தம் சுய அறிவின்றி, ஈசன் வசத்தினராகி அவரைப் பின் தொடர அனைவருடனும் முனிவர்கள் இருந்த யாகசாலைக்கு அருகில் வந்தார் ஈசன். இந்நிலையில் முனிவர்கள் சினம் கொண்டு யாரோ ஒரு காமுகனை தன் பத்தினிகள் பின் தொடர்ந்து வந்திருப்பதைக் கண்டு நிலைகுலைந்தனர். அவர்கள் அந்த திகம்பர சன்னியாசியைச் சபித்தனர். ஆனால், அவர்களுடைய சாபம் பலனற்றுப் போகவே திகைப்படைந்தனரே அல்லாமல், வந்தவர் பரமன் என்பதை அறிந்து கொள்ளவில்லை. அப்போது சன்னியாசி திடீரென்று மறைந்துவிட்டார். சன்னியாசி மறைந்தவுடன் கொடுந்துன்பங்கள் முனிவர்களைப் பற்றிக் கொண்டன. செய்வதறியாது அவர்கள் உதவிக்காக பிரமனை நாடினர். நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த பிரமன் முனிவர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். நீங்கள் பெரும் தவறு இழைத்துவிட்டீர்கள். முக்கியமாக அனைத்துக்கும் மேலான பரம்பொருள் ஒன்று இருப்பதை ஏற்கவில்லை. ...

திருவண்ணாமலை

 பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒருநாள்,சபையில் அமைச்சர்கள் புடைசூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது மன்னனின் நெருங்கிய நண்பனும்,ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான். சமணக்கவியான சம்பந்தாண்டான் மந்திர சாஸ்திரங்கள் கற்றறிந்தவன்.தேவி உபாசகனும்கூட. அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் மன்னன்.தனது ஆசனத்தில் அமர்ந்த சம்பந்தாண்டான் மெல்லிய குரலில், ”மன்னா, நண்பன் என்ற முறையில் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஆனால்…” என்று நிறுத்தியவன்,மன்னனின் முகத்தை ஏறிட்டான். சம்பந்தாண்டாரே!எதுவாயினும் தயங்காமல் சொல்லுங்கள்!” என்றார் மன்னர்.சம்பந்தாண்டான் தொடர்ந்தான்: ”மன்னா! சமீப காலமாகத் தங்களுடன் நட்புறவாடி வரும்,அருணகிரியைப் பற்றி தங்களது அபிப்ராயம்?” அந்தப் பெயரைக் கேட்டதும் மன்னனின் முகத்தில் பிரகாசம்! ”அருணகிரியார் மிகப்பெரிய ஞானி.அவருக்கு, முருகப்பெருமான் தரிசனம் தந்தது, வேலாயுதத்தால் அவர் நாவிலே ஆறெழுத்து மந்திரத்தை எழுதி முத்தமிழைப் புகட்டியது, ‘சும்மா இரு சொல்லற…’ என்று மௌனோபதேசத்துடன் ஜபமாலையும் தந்...

நாரதர் புராணம்

 நாரதர் புராணம்  பகுதி 8  சனி பகவானின் பார்வை ஒரு நாள் நாரதர் கயிலாயம் சென்றனர். அங்கு தேவர்கள் எல்லாம் வல்ல இறைவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். ஆனால் சனி பகவான் மட்டும் பகவானுக்கு முதுகைக் காட்டிய வண்ணம் உட்கார்ந்து இருந்தார். இதன் காரணத்தை அறிய நாரதர், தக்க சமயம் பார்த்து பார்வதி தேவியிடம் சென்று, இது பற்றிக் கூறி விளக்கம் கேட்டார். ஆனால் தேவியோ ஈசனைக் கேட்டுக் கூறுகிறேன். நாளை வந்து தெரிந்து கொள்ளுங்கள் என்றாள். அவ்வாறே ஈசனிடம் இதுபற்றி தேவி கேட்க, ஈசன் அவர் அப்படித்தான் அமரவேண்டும் என்றார். அது நம்மை அவமதிப்பது போல் இருக்கிறது. எல்லோரையும் போல் அவரும் நம்மைப் பார்த்தே அமரட்டும் என்றாள் தேவி ஈசனிடம். மறுநாள் சபையில் சனி எல்லோரையும் போல ஈசனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அதைப் பார்த்த பார்வதியின் மீது சனி பகவானின் பார்வையும் பட்டது. பிறகு பார்வதி தன் ஆசனத்தில் அமரச் சென்றாள். அங்கே இரண்டு ஆசனங்களில் சிவனும், பிரமனும் ஐந்து தலைகளுடன் அமர்ந்திருந்தனர். யார் சிவன் என்று அறிய முடியவில்லை. பின்னர் தன்னுள் சிவனைத் தியானித்தாள். இதனை உணர்ந்த சிவபெருமான் சனி பகவானைத் திரும்ப...

ஸ்ரீசனீஸ்வர பகவான் நோய்களை யாருக்கு எப்போது தருவார் ?

 வணக்கம் .......நண்பர்களே .......     ஸ்ரீசனீஸ்வர பகவான்  நோய்களை           யாருக்கு எப்போது தருவார் ?           ----------------------------------------------              ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம்  ராசிக்கு, 6ம் பாவ அதிபதி இருக்கும் ராசிக்கு, கோட்சார ஸ்ரீசனிபகவான் 1 4 7 10 ஆகிய பாவங்களில் வரும் போது, அந்த ஜாதகருக்கு உடல்நலம் பிரச்சினை  நோய்நொடிகள், மருத்துவ செலவுகள், மருத்துவமனையில் சிகிச்சைகளை ஏற்படுத்துவார். இந்த அமைப்பு உடன் மாரக - பாதகாதிகள் தொடர்பு  ஏற்பட்டால், கோமா நிலையையோ, மரணத்தையோ ஏற்படுத்துவார். இந்த அமைப்பில் கணவன் மனைவி  உட்பட  ஏதாவது ஒரு இழப்பை கொடுத்து கர்ம காரியம் செய்ய வைத்துவிடுவார்.        .

லவகுசா

 *லவகுசா - 9 பகுதி* •••••••••••••••••••••••••••••••• ராமன் தலையசைத்தார்.  அண்ணா! விருத்திராசுரன் என்பவனை இந்திரன் கொன்றான்.  இதனால், அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலைப்பாவம்) ஏற்பட்டது.  இதனைப்  போக்க அவன் அஸ்வமேத யாகம் செய்தான்.  இளன் என்ற அரசன், சிவபெருமானின் சாபத்தால் பெண்ணாக மாறினான்.  உமையம்மையிடம் அவன் சரணடைந்து பாவ விமோசனம் கேட்டான்.  அவள் அவனை ஆணாக ஒரு மாதமாகவும், பெண்ணாக ஒரு மாதமாகவும் இருக்க வரமளித்தாள்.  அப்படி பெண்ணாக இருந்த காலத்தில், அவள் புதனை மணந்து புரூரவா என்பவனைப் பெற்றான்.  தன் சாபம் நிரந்தரமாக நீங்க அவன் அஸ்வமேத யாகம் செய்தான்.  இப்படிப்பட்ட கொடிய பாவங்களையெல்லாம் போக்கும் இந்த யாகத்தையே தாங்கள் செய்யுங்கள், என்றான்.  உலகத்தையே காட்டிக்காக்கும் நாராயணனின் அவதாரமாகிய ராமபிரான், இதுபற்றி எல்லாம் அறிந்திருந்தாலும், லட்சுமணனின் வாயால் கேட்பதில் மகிழ்ந்தார்.  இதில் இருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் இல்லை.  சிலர் சொல்வார்கள்.  இந்தப் பொருளைப் பற்றிய தகவல்கள...

கஷ்டங்கள் தீர்க்கும் பஞ்சபுராண பாடல்கள் பற்றிய பதிவுகள்

 *கஷ்டங்கள் தீர்க்கும் பஞ்சபுராண பாடல்கள் பற்றிய பதிவுகள் :* தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாராயணம் செய்யலாம். *விநாயகர் வணக்கம்* “ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.” *திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்* “தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.” *மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்* “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே.” *சேந்தனார் அருளிய திருவிசைப்பா* “கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் ...

அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்!

 அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்! விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள!! நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம். உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும் போக்க வல்ல மருந்து  விஷ்ணு ஸஹஸ்ரநாமம். அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள 1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள். 18~யோகாய நம:  (Yogaaya namaha) தன் வீட்டிலிருந்த வெண்ணெய் எல்லாம் திருடித் தின்று விட்டுப் பானைகளையும் உடைத்தான் கண்ணபிரான். அதைக் கண்டு கடும் கோபம் கொண்ட யசோதை, பிரம்பை எடுத்துக் கொண்டு கண்ணனை அடிக்க வந்தாள். அவளுக்கு அஞ்சிக் கண்ணன் வெளியே ஓட, யசோதையும் பிரம்பைக் கையில் ஏந்தியபடி துரத்திக் கொண்டே வந்தாள். ஆயர்பாடியில் ததிபாண்டன் என்ற ஒரு தயிர் வியாபாரி இருந்தான்.  அவனது கடைக்கு ஓடி  வந்தான் கண்ணன். காலியாக இருந்த தயிர்ப் பானையைத் தலையணையாக வைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான் ததிபாண்டன். “மாமா! மாமா!” என்று இனிய, ஆழமான குரலில் அவனைக் கண்ணன் அழைத்தான். அவன் கண்விழித்துப் பார்த்து “என்ன?” என்று ...